10 இடங்களில் ‘அம்மா பெட்ரோல் பங்க்’
தமிழகத்தில், 10 இடங்களில், ‘அம்மா பெட்ரோல் பங்க்’ அமைக்கப்படும்’ என, சட்டசபையில், அரசு அறிவித்துள்ளது.
தமிழக்தில், 2011ல், அ.தி.மு.க., ஆட்சி பொறுப் பேற்றதும், வருவாய் துறையில், ‘அம்மா’ திட்டம் அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சி யாக, அம்மா உணவகம், ‘அம்மா’ சிமென்ட், ‘அம்மா’ மருந்தகம், ‘அம்மா’ ஆரோக்கிய திட்டம், ‘அம்மா’ உப்பு, அம்மா குடிநீர் என, படிப்படியாக, அம்மா பெயரிலான திட்டங்கள், அடுத்தடுத்து அறிவிக்கப்பட்டன.
இந்நிலையில், ‘அம்மா’ பெயரில், பெட்ரோல் பங்க் அமைக்கப் படும் என, அரசு அறிவித்துள் ளது.சட்டசபை யில் நேற்று, உணவுதுறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பேசிய காமராஜ், வெளியிட்ட புதிய அறிவிப்புகள்:
* தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின்,
33 மண்டலங்களில், மொத்தம்,221 சொந்த கிடங்கு வளாகங்கள் உள்ளன.
அவற்றில், பிரதான சாலை களில் அமைந்துள்ள, சேலம் – எடப்பாடி; சென்னை – நந்தனம்; தஞ்சை – இரும்புத்தலை; திருச்சி – மணப் பாறை; திருவாரூர் – சுந்தரக் கோட்டை; வேலுார் – வாணியம்பாடி; நாகை – கோயில்பத்து; மதுரை – கப்பலுார்; விழுப்புரம் – வானுார்; கரூர் – கிருஷ்ண ராயபுரம் என, 10 இடங் களில், ‘அம்மா பெட்ரோல் பங்க்’ அமைக்கப்படும். மத்திய எண்ணெய் நிறு வனங்களுடன் இணைந்து, இத்திட்டம் செயல்படுத்தப்படும்
* காவிரி டெல்டா மாவட்டங்களில், 25நேரடி கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்
* காவிரி டெல்டா மாவட்டங்களில் அறுவடை செய்யப்படும் நெல், மழை மற்றும் பனிப்பொழி விற்கு இலக்காகிறது. எனவே, இந்த நிதியாண்டில், 50 இடங்களில், 5.5 கோடி ரூபாயில், நெல்
உலர்த்தும் களங்கள் அமைக்கப்படும்.டெல்டா மாவட்டங்களில், ரூ.10 கோடியில், 25 நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்படும்.
* நுகர்பொருள் வாணிப கழகத்தின் நேரடி கொள் முதல் நிலையங்களில் பணிபுரியும், 4,460 பருவகால பணியாளர்களுக்கு, வருடாந்திர அகவிலைப்படி, 2,995 ரூபாயாக, உயர்த்தி வழங்கப்படும்.
* முதுநிலை மண்டல மேலாளர்களுக்கு, 51 அலுவலர்களுக்கு, மடிக்கணினி வழங்கப்படும்.
இவ்வாறு அவர் அறிவித்தார்