இந்திய அணியின் கனவு தகர்ந்தது
சாம்பியன்ஸ் டிராபி பைனலில் சொதப்பிய இந்திய அணி, பாகிஸ்தானிடம் தோற்று கோப்பையை கோட்டைவிட்டது.இங்கிலாந்தில் எட்டாவது சாம்பியன்ஸ் டிராபி தொடர் (மினி உலக கோப்பை) நடந்தது. நேற்று நடந்த பரபரப்பான பைனலில் ‘நடப்பு சாம்பியன்’ இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற இந்திய கேப்டன் கோஹ்லி ‘பவுலிங்’ தேர்வு செய்து அதிர்ச்சி அளித்தார்.பாகிஸ்தான் அணிக்கு பகர் ஜமான் அடிக்க, 50 ஓவரில், 4 விக்கெட்டுக்கு 338 ரன்கள் குவித்தது.பின், கடின இலக்கை துரத்திய இந்திய அணி, முகமது ஆமிர், ‘வேகத்தில்’ ஆட்டம் கண்டது. ரோகித் சர்மா, கோஹ்லி, தவான், யுவராஜ், தோனி விரைவாக கிளம்பினர்.கடைசி கட்டத்தில் ஷதாப் கான் ஓவரில், ‘ஹாட்ரிக்’ சிக்சர் அடித்த ஹர்திக் பாண்ட்யா, 32 பந்தில் அரைசதம் எட்டி ஆறுதல் அளித்தார். இந்திய அணி, 30.3 ஓவரில், 158
ரன்களுக்கு ஆல் அவுட்டாகி தோல்வி அடைந்தது.பாகிஸ்தான் சார்பில் முகமது ஆமிர், ஹசன் அலி தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.ஆட்டநாயகன் விருதை ஜமான் வென்றார்.
ஹாக்கியில் ‘ஹாட்ரிக்’ வெற்றி : உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்றுக்கான லீக் போட்டியில், கோல் மழை பொழிந்த இந்திய அணி 7 – 1 என்ற கணக்கில் பாகிஸ்தானை தோற்கடித்தது. இதன்மூலம் ‘ஹாட்ரிக்’ வெற்றியுடன் காலிறுதிக்கு முன்னேறியது.லண்டனில், ஆண்களுக்கான உலக ஹாக்கி லீக் அரையிறுதி சுற்று நடக்கிறது. இதில் அர்ஜென்டினா, மலேஷியா, இந்தியா, தென் கொரியா என, 10 அணிகள், 2 பிரிவுகளாக லீக் சுற்றில் பங்கேற்கின்றன. இந்திய
அணி, ‘பி’ பிரிவில் நெதர்லாந்து, ஸ்காட்லாந்து, பாகிஸ்தான், கனடா அணிகளுடன் இடம் பெற்றுள்ளது.முதலிரண்டு போட்டிகளில் ஸ்காட்லாந்து, கனடா அணிகளை வீழ்த்திய இந்தியா, நேற்று நடந்த 3வது லீக் போட்டியில் பாகிஸ்தானுடன் மோதியது. ஆட்டத்தின் 13வது நிமிடத்தில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், ‘பெனால்டி கார்னர்’ மூலம் முதல் கோல் அடித்தார். பின், 21, 24வது நிமிடங்களில் இந்தியாவின் தல்விந்தர் சிங், 2 கோலடித்து கைகொடுத்தார். முதல் 30 நிமிடங்களின் முடிவில் இந்தியா 3 – 0 என முன்னிலையில் இருந்தது.ஆட்டத்தின் 33வது நிமிடத்தில்
கிடைத்த ‘பெனால்டி கார்னர்’ வாய்ப்பில் இந்தியாவின் ஹர்மன்பிரீத் சிங், மீண்டும் கோலடித்தார். தொடர்ந்து அசத்திய இந்தியாவுக்கு 47, 49வது நிமிடங்களில் முறையே ஆகாஷ்தீப் சிங், மோர் பர்தீப் தலா 1 கோலடித்து கைகொடுத்தனர். ஆட்டத்தின் 57வது நிமிடத்தில் பாகிஸ்தானின் முகமது உமர் பூட்டா, 1 ‘பீல்டு’ கோல் அடித்து ஆறுதல் தந்தார். பின், 59வது நிமிடத்தில்
இந்தியாவின் ஆகாஷ்தீப் சிங், 2வது கோல் அடித்தார்.ஆட்டநேர முடிவில் இந்திய அணி 7 – 1 என வெற்றி பெற்றது. நாளை நடக்கவுள்ள 4வது லீக் போட்டியில் இந்திய அணி, நெதர்லாந்தை
எதிர்கொள்கிறது.