பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘ஜானி’
புதுமுக இயக்குநர் வெற்றிச்செல்வன் இயக்கத்தில் பிரசாந்த் நடித்துவரும் படத்துக்கு ‘ஜானி’ என தலைப்பிட்டு இருக்கிறார்கள்.
பிரசாந்த் நாயகனாக நடித்து இறுதியாக வெளியான படம் ‘சாஹசம்’. அப்படம் போதிய வரவேற்பைப் பெறவில்லை. அதனைத் தொடர்ந்து நாயகனாக நடிக்க பிரசாந்த் பல்வேறு இயக்குநர்களிடம் கதை கேட்டு வந்தார்.
அப்போது ஜீவா சங்கரிடம் உதவி இயக்குநராகப் பணிபுரிந்த வெற்றிச்செல்வன் கூறிய கதை பிடித்துவிடவே, படப்பிடிப்பு தொடங்கப்பட்டது. தியாகராஜன் தயாரித்து வரும் இப்படம் ஒரு ஆக்ஷன் த்ரில்லர் கதையாகும்.
அனன்யா சோனி நாயகியாக நடித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. ரஜினி நடித்த ‘ஜானி’ படத்தின் தயாரிப்பாளர்களிடம், அதன் தலைப்பு உரிமையை வாங்கி இப்படத்துக்கு ‘ஜானி’ என்று தலைப்பிட்டுள்ளது படக்குழு.
இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு, இந்தியில் உருவாகவுள்ள ‘நான்’ ரீமேக்கில் நடிக்க தேதிகள் ஒதுக்கியுள்ளார் பிரசாந்த்.