சாம்பியன்ஸ் டிராபி தொடரை கைவிட பரிசீலனை
இங்கிலாந்தில் நடைபெற்ற ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியை 180 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் சாம்பியன் பட்டம் வென்றது. அடுத்த சாம்பின்ஸ் டிராபி தொடரை வரும் 2021-ம் ஆண்டு இந்தியா வில் நடத்த ஏற்கெனவே திட்டமிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் டி20 உலகக் கோப்பையில் அதிக கவனம் செலுத்தும் வகையில் அதிகபட்ச மாக 20 அணிகளை பங்கேற்க வைக்க ஐசிசி ஆலோசனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனால் இந்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியுடன் இந்த தொடருக்கு முழுக்கு போட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இதுகுறித்து ஐசிசி தலைமைச் செயல் அதிகாரியான டேவிட் ரிட்சர்ட்சன் கூறும்போது, “அடுத்த சாம்பியன்ஸ் டிராபி தொடரை 2021-ல் தான் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.அதற்குள் எந்த மாற்றமும் நிகழ லாம். சாம்பியன்ஸ் டிராபி தொட ருக்கு பதிலாக இரண்டு டி20 உலகக் கோப்பை தொடர்களை நடத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடை பெற்று வருகிறது” என்றார்.