ஐ.சி.சி., வருமானம் பகிர்வு: பி.சி.சி.ஐ.,க்கு ரூ.2,615 கோடி
ஐ.சி.சி., புதிய வருமான பகிர்வு திட்டத்தின் படி, பி.சி.சி.ஐ.,க்கு ரூ.2,615 கோடி(405 மில்லியன் டாலர்) கிடைக்க உள்ளது.
சமரசம்:
ஐ.சி.சி., சார்பில் புதிய வருமான பகிர்வு முறை கொண்டு வரப்பட்டது. இதற்கு இந்திய கிரிக்கெட் போர்டான பி.சி.சி.ஐ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இதனையடுத்து பி.சி.சி.ஐ.,க்கு கூடுதல் பங்கு தர ஐ.சி.சி., ஏற்றுக் கொண்டது. இதன்படி, 2023ம் ஆண்டு வரை, பி.சி.சி.ஐ.,க்கு ரூ.2,615 கோடி தர ஐ.சி.சி., ஒத்துக்கொண்டுள்ளது. இது ஐ.சி.சி.,யின் ஒட்டு மொத்த வருமானத்தில் 22.8 சதவீதம்.
இதற்கடுத்து இங்கிலாந்து, ஆஸ்திரேலியாவுக்கு தலா ரூ.897 கோடியும், பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை, வங்கதேச அணிகளுக்கு தலா ரூ.826 கோடியும், ஜிம்பாப்வே அணிக்கு ரூ.606 கோடியும் கிடைக்கும்.