31 செயற்கைகோள்களுடன் விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி.,-சி38 ராக்கெட்
‘பி.எஸ்.எல்.வி., – சி 38’ ராக்கெட், 31 செயற்கை கோள்களுடன், இன்று விண்ணில் பாய்ந்தது.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, ‘இஸ்ரோ’ – பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ராக்கெட்கள் மூலம், செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. அதன்படி, இஸ்ரோ நிறுவனம், பி.எஸ்.எல்.வி., – சி 38 ராக்கெட் மூலம், ‘கார்ட்டோசாட் – 2’ செயற்கை கோளை, இன்று காலை, 9:29 மணிக்கு, ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து, விண்ணில் செலுத்தியது.
புவியை கண்காணிக்கும் இந்த செயற்கைகோளுடன், ஆஸ்திரியா, பெல்ஜியம், சிலி, செக் குடியரசு, பின்லாந்து, ஜெர்மனி, இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் இருந்து, 29 செயற்கைகோள்களும், இந்தியாவை சேர்ந்த ஒரு நானோ செயற்கைகோளும் விண்ணில் செலுத்தப்பட்டது. இதற்கான, கவுன்டவுன், நேற்று காலை, 5:29 மணிக்கு துவங்கியது.