Breaking News
அரசுக் சட்டக் கல்லூரிகளில் சட்டம் படிக்க தயாரா?

தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்துடன் (The Tamilnadu Dr. Ambedkar Law University) இணைவிப்பு பெற்றுத் தமிழ்நாட்டில் செயல்படும் அரசு சட்டக் கல்லூரிகளில் உள்ள இளநிலைச் சட்டப்படிப்புகளில் 2017-2018 ஆம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்.

அரசுச் சட்டக் கல்லூரிகள்
தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, திருச்சி, கோயம்புத்தூர், திருநெல்வேலி, செங்கல்பட்டு, வேலூர் ஆகிய இடங்களில் அரசுச் சட்டக்கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. 2017-2018 ஆம் கல்வியாண்டிலிருந்து விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் புத்தம் புதிதாகச் சட்டக்கல்லூரிகள் செயல்பாட்டுக்கு வரவிருக்கின்றன.

இளநிலைச் சட்டப்படிப்புகள்
சட்டக் கல்லூரிகளில் ஐந்தாண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்புடன் கூடிய இளநிலைச் சட்டப்படிப்பு (B.A.,L.L.B) மற்றும் மூன்று ஆண்டு இளநிலைச் சட்டப்படிப்பு (L.L.B) எனும் இரண்டு வகையான இளநிலைச் சட்டப்படிப்புகள் இடம் பெற்றுள்ளன.

கல்வித்தகுதி மற்றும் வயது
ஐந்தாண்டு இளநிலைச் சட்டப்படிப்புக்கு பிளஸ் டூ எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40% பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி அவசியம். மூன்றாண்டு சட்டப்படிப்பிற்கு ஏதாவதொரு பட்டப்படிப்பில் எஸ்சி, எஸ்டி பிரிவினர் 40% மதிப்பெண்களுடன் பிற பிரிவினர் 45% மதிப்பெண்களுடனும் தேர்ச்சி தேவை. இரண்டு சட்டப்படிப்புகளுக்கும் விண்ணப்பிக்க வயது வரம்பு ஏதுமில்லை.

விண்ணப்பம்
மேற்காணும் அரசு சட்டக் கல்லூரிகளிலும், விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் விண்ணப்பத்தை பெற்றுக்கொள்ளலாம். நேரடியாகப் பெற, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.250/- பிற பிரிவினர் ரூ.500/- என்று விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும்.

அஞ்சல் வழியில் பெற, எஸ்சி, எஸ்டி பிரிவினர் ரூ.350/- பிற பிரிவினர் ரூ.600/- என்று விண்ணப்பக் கட்டணமாகச் செலுத்த வேண்டும். அஞ்சல் வழியில் பெற விரும்புபவர்கள் ”The Registrar, The Tamilnadu Dr. Ambedkar Law University, “Poompozhil” No.5, Dr. D.G.S Dinakaran Salai, Chennai – 600028” எனும் முகவரிக்கு விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தி, வேண்டுதல் கடிதம் அனுப்பிப் பெறலாம்.

விண்ணப்பக் கட்டணத்தினை ஏதாவதொரு இந்தியன் வங்கிக் கிளையில் உரிய சலான் வழியாக மட்டுமே செலுத்த வேண்டும். விண்ணப்பக் கட்டணத்திற்கான சலானை அரசுச் சட்டக் கல்லூரி அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது www.tndalu.ac.in எனும் இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

நிரப்பப்பட்ட விண்ணப்பத்துடன் உரிய சான்றிதழ் நகல்களை இணைத்து, நேரடியாகச் சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகங்களிலும், விழுப்புரம், தருமபுரி, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலும் நேரடியாகக் கொடுக்கலாம். அஞ்சல் வழியில் அனுப்ப விரும்புபவர்கள் “The Chairman, Law Admissions 2017-2018, The Tamilnadu Dr. Ambedkar Law University, “Poompozhil” No.5, Dr. D.G.S Dinakaran Salai, Chennai – 600028” எனும் முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும். ஐந்தாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 23-6-2017. மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 17-7-2017.

மாணவர் சேர்க்கை
ஐந்தாண்டு சட்டப்படிப்பிற்கு பிளஸ் டூ தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், மூன்றாண்டு சட்டப்படிப்புக்கு இளநிலைப் பட்டப்படிப்பில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையிலும், தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீட்டு விதிப்படி மாணவர் சேர்க்கை நடைபெறும்.

கூடுதல் தகவல்களுக்கு, மேற்காணும் பல்கலைக்கழக இணையதளத்தைப் பார்க்கலாம் அல்லது அருகிலுள்ள சட்டக்கல்லூரி அலுவலகங்களுக்கு நேரடியாகச் சென்று தகவல்களைப் பெறலாம். சென்னை 044 – 25340907, மதுரை 0452 – 2533996, திருச்சி 0431 – 2420324, கோயம்புத்தூர் 0422 – 2422454, திருநெல்வேலி 0462 – 2578382, செங்கல்பட்டு 044 – 27429798, வேலூர் 0416 – 2241744 எனும் அரசு சட்டக் கல்லூரிகளின் தொலைபேசி எண்களில் தொடர்புகொள்ளலாம்

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.