Breaking News
கட்டடப் பொருட்களுக்கான தொழில்நுட்ப உயர்கல்வி கற்க விருப்பமா?

வர்த்தகம் மற்றும் தொழிற்சாலை அமைச்சகத்தின் கீழுள்ள ‘‘சிமெண்ட் மற்றும் கட்டடப் பொருட்கள் குழுமம்’’(National Council for Cement and Building Materials) – இத்துறை தொடர்பான அறிவியல் ஆய்வு, வர்த்தகம், தொழிற்சாலை இவற்றை மேம்படுத்தல், இத்துறைக்கான உயர்கல்வி வழங்குதல் போன்ற பணிகளை மேற்கொள்கிறது. இந்நிறுவனம், அண்மையில் சிமெண்ட் தொழில்நுட்பம் தொடர்பான உயர் படிப்புகளுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

படிப்புகள்
சிமெண்ட் தொழில்நுட்ப முதுநிலைப் பட்டயப்படிப்பு (Post Graduate Diploma in Cement Technology)
AICTE (All India Council of Technical Education) அங்கீகாரம் உள்ள இந்த ஓராண்டு படிப்பு பல்லாபர்க் (Ballabargh), பரீதாபாத் (Faridabad) என்ற இடங்களிலுள்ள நிறுவனங்களில் தரப்படுகிறது. இப்படிப்பிற்கு பி.இ. (B.E.) அல்லது பி.டெக். (வேதியியல் தொழில்நுட்பம்) B.Tech.(Chemical Engineering) அல்லது எம்.எஸ்சி. (வேதியியல்) M.Sc.(Chemistry) குறைந்தது 60% தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இப்படிப்பிற்கு நேரடியாகச் சேர்பவர்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ. 90,000 மற்றும் தொழிற்சாலைகளாக சிபாரிசு செய்யப்பட்டவர்கள் ரூ. 3,70,000 செலுத்த வேண்டும் (தங்குமிடம்,உணவு,பயிற்சிக்கட்டணம் உள்ளடங்கியது). விண்ணப்பிக்க, இணையத்தளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கி, 30.6.2017 தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக் கட்டணமாக பொதுப்பிரிவினர் ரூ. 500, ஆதிதிராவிடர், பழங்குடியினர் ரூ. 125 செலுத்த வேண்டும். இக்கட்டணத்தை ECS வழியாக, State Bank of India, CRI, Faridabad என்ற வங்கியில், (SB:10383962218 – MICR:110002196 – IFSC:SBIN0003794) செலுத்த வேண்டும்.

2. சிமெண்ட் தொழில்நுட்பப் பட்டயப்படிப்பு (Diploma in Science Technology)
இப்படிப்பு ஓராண்டு தொலைதூர முறையிலான படிப்பு. பல்லாபர்க் (Ballabargh), ஹைதராபாத் (Hyderabad) என்ற இடங்களிலுள்ள குழுமத்தின் அமைப்புகள் வழியாக நடத்தப்படும் இப்படிப்பு, ஒரு பிரிவிற்கு 3 மாதம் என்றவாறு நான்கு பிரிவுகளாகத் தரப்படுகிறது. இந்த ஓராண்டுப் படிப்பை அதிகபட்சம் 3 ஆண்டுகளில் முடித்துக்கொள்ளலாம்.

அறிவியல் பட்டம் முடித்தவர்கள் அல்லது இத்துறையில் தொழில்நுட்பப் பட்டம் பெற்றவர்கள் (அ) பொறியியலில் பட்டயம் பெற்றவர்கள் இப்படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஒவ்வொரு பருவத்திற்கும், ஒரு வாரம் நேரடி வகுப்புகள் உண்டு. இந்தியா, பூடான், நேபாள மாணவர்கள் ஆண்டுக் கட்டணமாக ரூ. 60,000 மற்றும் அயல்நாட்டினர் ரூ. 1,000 US$ செலுத்த வேண்டும். இப்படிப்பிற்கு விண்ணப்பிப்பவர்கள் இணையத்தின் வாயிலாக 14.7.2017 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். கட்டணத்தை SBI வழியாகவோ அல்லது RTGS/NEFT (National Council for Cement and Building Material) செலுத்த வேண்டும்.

SBI (CRI Faridabad – A/C SB 10383962218,
MICR:110002194, IFSC:SBIN000 3794, PAN:AAATN 2477N, TANNO: DELN09625A,
STLNO: AATN 2477 NSTOOL) என்றவாறு செலுத்த வேண்டும்.

தொடர்பிற்கு : National Council for Cement and Building Materials, 34, KM Stunt, Delhi – Mathura Road (NH-2), Ballabargh-121004, Harynaa-India, Ph: +91-129-4192245/4192469/468, 2241453 E.Mail: cceb@ncbindia.com. Web: www.ncbindia.com.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.