பணமோசடி: பயங்கரவாத அமைப்புகள் மீது அமலாக்கத்துறை வழக்கு
பணமோசடி தடுப்பு சட்டத்தின் கீழ், காஷ்மீர் பிரிவினைவாத அமைப்பு தலைவர்கள், லஷ்கர் இ தொய்பா தலைவர் ஹபீஸ் சயீத், மற்றும் ஹிஸ்புல்முஜாகிதீன் உள்ளிட்ட பயங்கரவாத அமைப்புகள் மீது அமலாக்கத்துறை அதிகாரிகள் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளை மேற்கொள்ள, இவர்கள் சட்டவிரோதமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அமைப்புகள் உதவியுடன் பணத்தை கொண்டு வந்தது தொடர்பாக அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்த உள்ளனர்.
இந்த புகார் தொடர்பாக தேசிய புலனாய்வு பிரிவு அதிகாரிகள் கடந்த சில நாட்களுக்கு முன்பு, டில்லி மற்றும் காஷ்மீரில் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.