விளையாட்டில் சாதித்தவர்களுக்குக் கணக்கு தணிக்கை அதிகாரி பணி!
நிறுவனம்:
இந்திய தலைமைக் கணக்குத் தணிக்கை இயக்குநரகம்
வேலை:
கணக்குத் தணிக்கை அதிகாரி பணியிடங்கள்
காலியிடங்கள்:
171
வயது வரம்பு:
27 வயதிற்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி:
பட்டப்படிப்பு படித்தவர்கள், ஆடிட்டர், அக்கவுண்டன்ட் பணிக்கு விண்ணப்பிக்கலாம். பிளஸ் 2 தேர்ச்சியுடன் தட்டச்சு தெரிந்தவர்கள் கிளார்க் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். கிரிக்கெட், கால்பந்து, பேட்மிண்டன், டேபிள் டென்னிஸ், ஹாக்கி போன்ற விளையாட்டுகளில் சாதித்தவர்களும் விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யும் முறை:
கல்வித்தகுதி, விளையாட்டில் பெற்ற சாதனைகள், சான்றிதழ்கள் மற்றும் களப் பரிசோதனை ஆகியவற்றில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்கள் இரண்டு வருடம் பயிற்சி பெற்ற பிறகுதான் பணியில் நியமிக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆடிட்டர், அக்கவுண்டென்ட் மற்றும் கிளார்க் பணிகளுக்குத் தனித்தனி விண்ணப்பங்கள் உள்ளன. அதைப் பூர்த்தி செய்து, தேவையான சான்றிதழ்களுடன் இம்மாதம் இறுதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கூடுதல் தகவல்களுக்கு: www.cag.gov.in