ரஜினி அரசியல் குறித்து செளந்தர்யா ரஜினிகாந்த் கூறியது என்ன?
ரஜினி அரசியலுக்கு வருவாரா? வரமாட்டாரா? என்பதுதான் தற்போதைய தமிழகத்தின் ஹாட் டாக். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்று ஒருசில கட்சியினர்களும், வரக்கூடாது என்று சிலரும் கூறி வரும் நிலையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து இயக்குனரும் ரஜினியின் இளையமகளுமான செளந்தர்யா ரஜினிகாந்த் சமீபத்தில் பேட்டியளித்தார்.
எனது தந்தை எப்போதுமே மனதுக்கு சரி என்று பட்டதைத்தான் செய்வார். அவர் எதைச் செய்தாலும் சரியான நேரத்தில் செய்வார். அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர் என்ற முறையில் நாங்கள் அவருக்கு ஆதரவாக இருப்போம். அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரி, நாங்கள் அவருக்கு ஆதரவாகவே இருப்போம்.
இந்த நிலையில் ரஜினியின் மனைவி லதா மற்றும் ரஜினியின் மருமகன் தனுஷ் ஆகியோர் இதுகுறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.