கோலி-கும்ப்ளே விவகாரத்தை இன்னும் நல்ல முறையில் கையாண்டிருக்கலாம்: கங்குலி கருத்து
கேப்டன் கும்ப்ளேவுக்கும் பயிற்சியாளர் கோலிக்கும் இடையிலான விரிசல் விவகாரத்தை பிசிசிஐ இன்னும் நல்ல முறையில் கையாண்டிருக்கலாம் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் நிருபர்களிடம் கங்குலி கூறியதாவது:
கேப்டன் கோலி, பயிற்சியாளர் கும்ப்ளே ஆகியோருக்கு இடையான பிரச்சினை விவகாரத்தை இன்னும் நல்ல முறையில் பிசிசிஐ கையாண்டிருக்கலாம். இந்த விவகாரம் சரியாகக் கையாளப்படவில்லை.
ரவிசாஸ்திரி பயிற்சியாளருக்கு விண்ணப்பம் செய்வது குறித்து…
அனைவருக்கும் விண்ணப்பிக்க உரிமை உள்ளது. யார் பொருத்தமானவர்கள் என்பதை முடிவெடுப்போம், நான் நிர்வாகியாக இல்லாமலிருந்தால் நான் கூட விண்ணப்பிக்கலாம்.
லோதா கமிட்டி சீர்த்திருத்தங்கள் குறித்து நிர்வாகக் கமிட்டி என்ன கூறுகிறது என்பதை நாங்கள் கவனிக்க வேண்டும். என்ன நடக்கும் என்பதை என்னால் சரியாகக் கூற முடியவில்லை, என்றார் கங்குலி.