லிபியா: பெங்காசியை விடுவித்ததாக கிழக்கு படைத் தலைவர் அறிவிப்பு
லிபியாவில் சர்வாதிகாரி மௌமர் கடாஃபியின் ஆட்சி நீக்கப்பட்டப் பிறகு ஏற்பட்ட பல முனைப்போரில் பெங்காசியில்தான் அதிகமான நாட்கள் சண்டை நடந்து வந்தது.
பெங்காசியை அடுத்து ஹஃப்தார் தலைநகரான டிரிபோலியை நோக்கி நகருவார் என்று தெரிகிறது. லிபியாவின் தலைநகரில் இருக்கும் ஐநா அங்கீகாரம் பெற்ற அரசு மீது ஹஃப்தார் போர் தொடுப்பார் என்றே கருதப்படுகிறது. அங்குள்ள அரசை அவர் இஸ்லாமிய தீவிரவாதிகளின் அரசு என்றே கூறி வருகிறார்/ எனினும் பெங்காசியை இழந்தப் படைகள் கொரில்லா தாக்குதல் முறையில் ஹஃப்தார் படைகளுடன் சண்டையிடும் வாய்ப்பும் உண்டு.
ஹஃப்தார் கடாஃபியின் படையில் பணியாற்றியவர். பெங்காசியை விடுவிக்க மூன்றாண்டுகளுக்கு முன்பு அவர் “கண்ணிய போர்முனை’யைத் துவக்கினார்.
ஹஃப்தார் டிரிபோலிக்குள் நுழைந்தால் லிபியாவில் தொடர்ந்து போர் நடக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.