சீன படைகள் காஷ்மீருக்குள் நுழையும் : இந்தியாவுக்கு சீனா எச்சரிக்கை
இந்திய படைகள் சீன எல்லைக்குள் புகுந்து, சீனாவையும் பூட்டானையும் சீண்டிப் பார்த்தால் இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீருக்குள் சீன படைகள் நுழையும் என சீனா, இந்தியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
டோக்லாம் பகுதியில் சீனா சாலை அமைப்பதை இந்திய படைகள் தடுத்து வருகின்றன. இந்த சாலை அமைக்கப்பட்டால் அது திபெத் மற்றும் பூட்டானுடன் சிக்கிம்மை இணைக்கும். இதனால் சிக்கிம் மற்றும் இந்திய பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும். ஆனால், இந்திய படைகள் சீன எல்லைக்குள் அத்துமீறி பலமுறை நுழைந்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது.
இது குறித்து சீன ஆய்வாளர் லாங் ஷிங்சுன் எழுதி உள்ள கட்டுரையில், பூடான் பகுதியை பாதுகாக்க இந்தியா கேட்டுக் கொண்டால் அப்பகுதி பொதுவான பிரதேசமாக இருக்கும். தொல்லையான பகுதியாக இருக்காது. ஒருவேளை இந்தியா நினைப்பது போல், பாக்., அரசு கேட்டுக் கொண்டால், இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில் இந்தியா, பாகிஸ்தான் தவிர 3வது நாட்டின் ராணுவமும் நுழையும் என குறிப்பிட்டுள்ளார்.