சீன ராணுவத்தில் ஆட் குறைப்பு
சீன ராணுவம் ஆட் குறைப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது குறித்து சீன ராணுவ பத்திரிகை கூறி உள்ளதாவது:
சீன ராணுவத்தில் தற்போது 23 லட்சம் வீரர்கள் உள்ளனர். இதில் சுமார் 13 லட்சம் வீரர்களை பணியில் இருந்து விடுவிக்க உள்ளது. ராணுவத்தில் தற்போது பழைய நடைமுறைகளே கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
நவீ னஉத்திகள்
நவீன காலத்திற்கு ஏற்ப உத்திகளை மேற்கொள்ள நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கப்பல் படை ராக்கெட் ஏவுகணை படை பிரிவுகளை வலுப்படுத்த முடிவு செய்துள்ளது. அதே நேரத்தில் விமானப்படையில் எவ்வித மாற்றமும் செய்யப்போவதில்லை என கூறி உள்ளது.
உலகிலேயே மிக பெரிய ராணுவத்தை வைத்துள்ளது சீனா. மேலும் கடந்த 2015-ம் ஆண்டில் சீன பிரதமர் ஜிஜிங்பிங், சீன ராணுவத்தில் 3 லட்சம் வீரர்கள் குறைக்கப்படுவர் என கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.