மகளிர் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்து மித்தாலி ராஜ் உலக சாதனை
மகளிர் ஒரு நாள் போட்டியில் அதிக ரன்கள் குவித்து இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மித்தாலி ராஜ் உலக சாதனை படைத்துள்ளார்.
மகளிர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் இந்தச் சாதனையை மித்தாலி ராஜ் நிகழ்த்தி உள்ளார்.
மகளிர் உலகப் கோப்பை இங்கிலாந்து நடைபெற்று வருகிறது. பிரிஸ்டலில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் விளையாடி வருகின்றன. டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணியின் மித்தாலி ராஜ் இந்தத் ஆட்டத்தில் 33 ரன்களை எடுத்தபோது மகளிர் ஒரு நாள் தொடரில் அதிக ரன்கள் குவித்த வீராங்கனை என்ற உலக சாதனையை படைத்தார்.
இதன் மூலம் 191 போட்டிகளில் 5992 ரன்கள் எடுத்திருந்த இங்கிலாந்து வீராங்கனை சார்லட் எட்வர்சன் முந்தைய சாதனையை மித்தாலி முறியடித்தார். மேலும் மகளிர் கிரிக்கெட்டின் ஒருநாள் தொடரில் 6000 ரன்களை தொட்ட முதல் வீராங்கனை என்ற பெருமையும் மித்தாலி தனதாக்கி கொண்டார்.
மகளிர் உலகப் கோப்பை தொடரில் தொடர்ந்து சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தி மித்தாலி ராஜ் வெளிப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.