‘கிரீன் கார்டு’ கட்டுப்பாடுகளை நீக்க அமெரிக்காவில் மசோதா தாக்கல்
கிரீன் கார்டு’ எனப்படும், நிரந்தர குடியுரிமை அளிப்பதில், ஒவ்வொரு நாட்டுக்கும், ஒதுக்கீடு அளிப்பதில் மாற்றம் கொண்டு வரும் மசோதா, அமெரிக்க பார்லிமென்டில் தாக்கல்
செய்யப்பட்டுள்ளது; இது நிறைவேறினால், இந்தியா, சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு அதிக அளவில் கிரீன் கார்டு கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.குடியரசு கட்சியைச் சேர்ந்த, எம்பி.,யான, கெவின் யோடர் கொண்டு வந்துள்ள இந்த மசோதாவுக்கு, 230க்கும் மேற்பட்ட, எம்.பி.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
மசோதா குறித்து யோடர் கூறியதாவது:உலகில் அதிக மக்கள் தொகை உடைய நாடுகளான இந்தியா, சீனாவுக்கும், குறைந்த மக்கள் தொகை உடைய கிரீன்லாந்து நாட்டுக்கும் ஒரே அளவில், கிரீன் கார்டு ஒதுக்கப்படுவது நியாயமில்லை. இந்தியாவைச் சேர்ந்த ஒரு தகவல் தொழில்நுட்ப நிபுணர், கிரீன் கார்டு பெறுவதற்கு, சராசரியாக, 12 ஆண்டுகள் காத்திருக்கும் நிலை உள்ளது. இதை மாற்றி, பதவியின் அடிப்படையிலும், தொழில் திறன் அடிப்படையிலும் கிரீன் கார்டு வழங்குவதற்காக இந்த மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.