தினகரன் அணியினருக்கு திடீர் முக்கியத்துவம்
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்களுக்கு, சட்டசபையில் பேச தொடர் வாய்ப்பு அளிக்கப்படுகிறது.
புகழ்ச்சி:
சட்டசபையில், தினகரன் அணியை சேர்ந்த செந்தில்பாலாஜி, பழனியப்பன் உள்ளிட்ட எம்.எல்.ஏ.,க்கள், தனியாக செயல்பட்டு வருகின்றனர். தங்கதமிழ்செல்வன், ஒரு படி மேலே போய் வெளிநடப்பு செய்தார். அந்த அணி எம்.எல்.ஏ.,க்கள் பேசும் போது, சசிகலாவையும், தினகரனையும் வானளாவ புகழ்ந்து பேசுகின்றனர்; முதல்வர் பழனிசாமியை பெரிதாக குறிப்பிடுவதில்லை. இருப்பினும், அந்த அணியினருக்கு, தொடர்ந்து முக்கியத்துவம் தரப்படுகிறது.
சலசலப்பு:
இந்நிலையில், நேற்று முன்தினம், செந்தில்பாலாஜி, ஜி.எஸ்.டி., வரி விதிப்பை விமர்சித்து பேசினார். இதனால், ஆளும் கட்சிக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. ஆனாலும், சட்டசபையில், நேற்று ஒரே நாளில், அந்த அணியை சேர்ந்த பழனியப்பன், ஜக்கையன் ஆகியோருக்கு பேச வாய்ப்பு தரப்பட்டது. பழனியப்பன் பேசும்போது, அந்த அணியை சேர்ந்த எம்.எல்.ஏ., வெங்கடாசலத்தை, ‘என் நண்பர்’ எனக்கூறி நெருக்கம் காட்டியபோது, ஆளும் கட்சியில் சலசலப்பு ஏற்பட்டது.