நாட்டின் அடுத்த ஜனாதிபதி யார் ? இன்று தேர்தல்
உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் 14 வது ஜனாதிபதியை தேர்வு செய்வதற்கான தேர்தல் இன்று (ஜூலை 17) நடக்கிறது. நாடு முழுவதும் உள்ள எம்.பி.,க்கள், எம்.எல்.ஏ.,க்கள் தங்களின் ஓட்டுக்களை அளிக்கவுள்ளனர்.
ஆளும் பா.ஜ., சார்பில் ராம்நாத் கோவிந்த்தும், எதிர்க்கட்சிகள் சார்பில் மீராகுமாரும் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில் 776 தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.பி.க்கள், 4,120 எம்.எல்.ஏ.க்கள் என மொத்தம் 4,896 பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர்.
காலை 10 மணிக்கு துவங்கி, மாலை 5 மணி வரை நடைபெற உள்ளது. இன்று பதிவாகும் ஓட்டுக்கள் ஜூலை 20 ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜூலை 25 ம் தேதி புதிய ஜனாதிபதி பதவியேற்பார்.