நீட் தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி 27ஆம் தேதி மனித சங்கிலி போராட்டம்: திமுக
தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அறிவாலயத்தில் இன்று காலை நடந்தது.
தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.
பொதுச் செயலாளர் பேராசிரியர் அன்பழகன் முதன்மை செயலாளர் துரை முருகன், துணை பொது செயலாளர் வி.பி.துரைசாமி உள்பட தலைமைக்கழக நிர்வாகிகள் கலந்து கொண் டனர்.
மாவட்ட செயலாளர்கள் ஜெ.அன்பழகன், மா.சுப்பிரமணியன், தா.மோ.
அன்பரசன், மாதவரம் சுதர்சனம், கே.என்.நேரு, சுரேஷ் ராஜன், அனிதா ராதாகிருஷ்ணன் உள்பட அனைத்து மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தில் நீட் தேர்வுக்கு தமிழகத்துக்கு நிரந்தர விலக்கு கோருவதற்கு எடுக்க வேண்டிய முயற்சிகள், போராட்டங்கள் பற்றி விவாதிக்கப்பட்டு, மேலும் தற்போதைய அரசியல் நிலவரங்கள், கட்சி பணிகள் பற்றியும் விவாதித்தனர்.
கூட்டத்தில் மாணவி வளர்மதி மற்றும் திருமுருகன் காந்தி மீது போடப்பட்ட குண்டர் சட்டத்தை ரத்து செய்து விடுதலை செய்ய வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றபட்டது.
நீட் தேர்விலிருந்து தமிழகத்திற்கு விலக்களிக்க வலியுறுத்தி வரும் 27ம் தேதி தமிழகம் முழுவதும் திமுக மனிதச் சங்கிலி போராட்டம் நடத்துவது என கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றபட்டது.