ஐ.பி.எல்., நிதி முறைகேடு: நடிகர் ஷாருக்கானுக்கு அமலாக்கத்துறை சம்மன்
ஐ.பி.எல். கிரிக்கெட் நிதி முறைகேடு வழக்கில் பாலிவுட்நடிகர் ஷாருக்கான் உள்ளிட்ட மூன்று பேருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
ஐ.பி.எல், டுவென்டி-20 கிரிக்கெட் போட்டி தொடர்களில், பல்வேறு நிதி முறைகேடு செய்ததாக கோல்கட்டா அணி உரிமையாளர் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது. இதில் கோல்கட்டா அணி தனது ரூ. 2-கோடிக்கான பங்குகளை வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு விற்றதாக கூறப்பட்டுள்ளது, இதன் மூலம் அரசு ரூ.73 கோடியே 65 லட்சம் அன்னிய செலாவணி இழப்பீடு ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
அமலாக்கத்துறை வட்டாரங்கள் கூறுகையில், ஏற்கனவே ஐ.பி.எல்.நிதி முறைகேடு வழக்கில் அமலாக்கத்துறை முன் கடந்த 2011-ம் ஆண்டு ஷாருக்கான் ஆஜரானார். இதையடுத்து வெளிநாட்டு பண பரிவர்த்தனை மோலாண்மை சட்டத்தின் விதிமுறைகளை மீறியதாக ஷாருக்கான், இவரது மனைவி கவுரி, நடிகை ஜூலி சாவ்லா ஆகியோருக்கு சம்மன் அனுப்பியுள்ளோம். மும்பையில் உள்ள அலுலகத்திற்கு வரும் ஆகஸ்ட் 23-ம் தேதி ஆஜராக வேண்டும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.