சலுகைகள் ரத்தானதால் சசிகலா கவலை உண்மை கண்டறியும் சோதனை நடத்த முடிவு?
பெங்களூரு சிறையில், அ.தி.மு.க., சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளதால், அவர், கவலையடைந்துள்ளதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிறையில் சலுகைககள் பெற, பணம் கைமாறியது உண்மைதானா என்பதை அறிய, சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த, அதிகாரிகள் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அம்பலம்
சொத்து குவிப்பு வழக்கில், 4ஆண்டு தண்டனை பெற்ற, அ.தி.மு.க., சசிகலா, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். சிறையில், அவருக்கு சலுகை அளிக்க பட்டதை, டி.ஐ.ஜி., ரூபா, அம்பலப்படுத்தினார். இதை யடுத்து, சசிகலாவுக்கு அளிக்கப்பட்டு வந்த சலுகை அனைத்தையும்,சிறை நிர்வாகம் அதிரடியாக ரத்து செய்துள்ளது. சசிகலா,
சிறையில் ஐந்து மாதம், தினமும் வண்ண வண்ண புடவை, சுடிதார் போன்றவை அணிந்து, தனக்கு வேண்டிய உணவுகளை, சமைத்து தர சொல்லி, தன் இஷ்டம் போல், வாழ்ந்து வந்தார்.
தற்போது, கூடுதல், டி.ஜி.பி.,யின் உத்தரவால், மற்ற கைதிகளுக்கு வழங்கப்படும் உணவையேசாப்பிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். மேலும், கைதிகளுக்கான, வெள்ளை புடவை சீருடையை, அவர் அணிவதாகவும், அதனால், அவர் கவலை அடைந்துள்ளதாகவும் தெரிகிறது.
இதையறிந்த அவரது ஆதரவாளர்களில் சிலர், சசிக லாவின், உடல் நிலையை காரணம் காண்பித்து, சிறப்பு சலுகைகளை பெறுவதற்கு, நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
பட்டியல் தயாரிப்பு
சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து கொடுக்க, இரண்டு கோடி ரூபாய் லஞ்சம் பெறப்பட்ட புகார் குறித்து, விசாரணை கமிஷன் தலைவரான, ஓய்வு பெற்ற, ஐ.ஏ.எஸ்.,அதிகாரி வினய்குமார், சிறையில், சசிகலாவை சந்திக்கவந்தவர்கள் பேசிய மொபைல் தொடர்புகள் பட்டியலை தயாரித்துவருகிறார்.
சிறையில் சிறப்பு சலுகை வழங்க, பணம் கைமாறிய குற்றசாட்டில்,தமிழக,எம்.எல்.ஏ.,க்களுக்கு தொடர்பு உள்ளதா என்ற கோணத்திலும், வினய் குமார் விசாரிக்க திட்டமிட்டுள்ளார். விரைவில் தமிழகம் சென்று, விசாரணை மேற்கொள்ள உள்ளதாக
தகவல் வெளியாகியுள்ளது.பணம் கைமாறியது உண்மை தானா என்பதை அறிய, சசிகலாவிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்துவது குறித்து, விசாரணை கமிஷன் ஆலோசித்து வருவதாக, கூறப்படுகிறது.
வாரிசுகளுக்கு சிக்கல்
இந்த விவகாரத்தில், சசிகலாவின் குடும்ப உறுப்பினர்களின், இரண்டு இளம் வாரிசு களுக்கு தொடர்பு உள்ளதா என, மத்திய உளவுத் துறை போலீசார், ரகசிய விசாரணை மேற் கொண்டுள்ளனர்.
உளவுத்துறை போலீசாரின் அறிக்கைக்கு பின், வாரிசுகள் இருவரும், சிறை முறைகேடு குறித்து விசாரிக்கும், ஐ.ஏ.எஸ்., அதிகாரியின் விசாரணை வளையத்தில் சிக்குவர் எனவும், தகவல் வெளியாகி உள்ளது.