உலகில் எவரும் பசியுடன் தூங்கக் கூடாது-கவுதம் காம்பீர்
இந்திய அணியின் முன்னாள் துவக்க வீரரான கம்பீர், கவுதம் கம்பீர் பவுண்டேஷன் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
இதன் மூலம் ஏழைக்குழந்தைகளின் பசியை போக்கவும், அவர்களின் கல்விக்காகவும் பல்வேறு உதவிகளை செய்து வருகிறார்.
தனது பவுண்டேசன் மூலம் சமூக சமையலறை என்ற பெயரில் டெல்லியில் ஆண்டு முழுவதும், 365 நாட்களும் ஏழ்மையில் உள்ளவர்களுக்கு உணவு அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கம்பிர் தனது டுவிட்டர் பக்கத்தில், உலகில் எவரும் பசியுடன் தூங்கக் கூடாது என்ற பிரார்த்தனை என் உதடுகளில் ஒலித்துக் கொண்டே இருக்கும் என்று பதிவேற்றம் செய்துள்ளார்.
Compassion in my heart, a plate in my hand & a prayer on my lips ‘No one should sleep hungry’ #ggf#communitykitchen1pic.twitter.com/EsZEG84rVI
— Gautam Gambhir (@GautamGambhir) July 31, 2017
மேலும் சத்தீஸ்கர் மாநிலத்தில் தீவிரவாதிகளின் தாக்குதலால் மரணமடைந்த 150-க்கும் மேற்பட்ட வீரர்களின் குழந்தைகளின் கல்வி செலவு முழுவதையும் கம்பீர் ஏற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.