நிறத்தால் பட வாய்ப்பு பாதிப்பா? எமி ஜாக்ஸன் பதில்
லண்டனை சேர்ந்தவர் எமி ஜாக்ஸன். மதராஸ பட்டணம் மூலம் தமிழில் அறிமுகமானார். தாண்டவம், ஐ, கெத்து, தங்கமகன் என தமிழில் தொடர்ந்து நடித்துள்ள அவர் தற்போது ரஜினியுடன் 2.0 படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தவிர தற்போது அவருக்கு கைவசம் தமிழில் படங்கள் எதுவும் இல்லை. வெள்ளைக்கார பெண் என்பதால் உங்களுக்கு பட வாய்ப்புகள் வருவதில் பிரச்னை உள்ளதா? என்றதற்கு பதில் அளித்தார் எமி.
இதுபற்றி அவர் கூறும்போது,’நிறவெறி காரணமாகவும், இன்னும் சிலவற்றுக்காகவும் இணைய தளம் வாயிலாக நான் நிறைய விமர்சிக்கப்பட்டுள்ளேன்.
ஆனால் வெளியில் சந்திக்கும் நபர்கள் என்னுடன் நட்பாகவே பழகுகின்றனர். மதிப்பு குறைவான எந்த பாதிப்பும் எனக்கு ஏற்பட்டதில்லை. நிறபாகுபாடு என்பது ஒரு பிரச்னை இல்லை. திரைப்பட துறையில் மட்டுமல்ல எல்லா இடங்களிலும் அது காணப்படுகிறது. லண்டனில் நான் மாடல் அழகியாக அறிமுகமானபோது நிறைய போராட்டங்களை எதிர் கொண்டேன். பல சமயம் நான் நிராகரிக்கப்பட்டிருக்கிறேன்.
அது எனக்கு வருத்தம் அளித்திருக்கிறது. ஆனால் அதிலிருந்து இப்போதைக்கு பக்குவப்பட்டிருக்கிறேன். சினிமாவிலும் அப்படியொரு பக்குவம் எனக்கு வந்திருக்கிறது. ஒரு படத்துக்காக ஆடிஷனுக்கு அழைக்கப்பட்டு பின்னர் நான் தேர்வாகவில்லை என்றால் அதுபற்றி கவலைப்படுவதில்லை. எனக்குத்தான் அந்த வாய்ப்பு தரப்பட வேண்டும் என்று விதி எதுவும் எழுதிவைக்கப்பட்டி ருக்கவில்லை என்பதை நான் உணர்ந்திருக்கிறேன்.