அக்.,12 வரை தமிழகத்திற்கு மழை வாய்ப்பு
தமிழகம், புதுச்சேரியில், அக்., 12 வரை மிதமான மழை இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு பருவ மழை, வட மாநிலங்களில் இருந்து படிப்படியாக விலகி, தென் மாநிலங்களை நெருங்கி உள்ளது. அதனால், ஆந்திரா, தெலுங்கானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில், மழை கொட்டுகிறது.
இந்நிலையில், தமிழகத்தை ஒட்டிய, வங்க கடல் பகுதியில், ஆந்திரா முதல், கன்னியாகுமரி வரை, மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இதனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கட லோர பகுதிகளில், அக்., 12 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது