பிக்பாஸ் வெற்றிக் கொண்டாட்டம்… ஜிமிக்கி கம்மலுக்கு நடனம் ஆடி தெறிக்கவிட்ட ஓவியா
பிக்பாஸ் நிகழ்ச்சியில் வெற்றிக் கொண்டாட்ட நிகழ்ச்சி அண்மையில் கொண்டாடப்பட்டது. இதில் 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.
பிக்பாஸ் எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சி கடந்த ஜூன் 26-ஆம் தேதி தொடங்கப்பட்டது. இதில் 15 போட்டியாளர்கள் கலந்து கொண்டு பிக்பாஸ் வீட்டில் 100 நாள்கள் தங்கியிருக்க வேண்டும்.
அங்கு ஏற்படும் இன்னல்களையும், கொடுக்கப்பட்ட டாஸ்க்குகளையும் தாண்டி மக்கள் மனதில் இடம் பெற்றிருப்பவரே வெற்றியாளர் ஆவர்.
ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது தமிழகம் முழுவதும் அறியப்பட்டவர் ஜூலி. அவர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. இருந்தும் போலி, பொய் ஆகியவற்றின் மொத்த உருவமாக இருந்த ஜூலி பெயரை கெடுத்துக் கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் ஓவியா ஆர்மி என்று ஆரம்பிக்கும் அளவுக்கு அவருக்கு ரசிகர்கள் கிடைத்தனர். அவரது நேர்மை, உண்மை ஆகியவற்றை பார்த்து தானாக கூட்டம் சேர்ந்தது. அதேபோல் பரணியும் மக்கள் மனதில் இடம் பெற்றார். ஆரவ்- ஓவியா காதல் பெரிதும் பேசப்பட்டது.
இந்த நிகழ்ச்சியின் 100 நாள்களாக கணேஷ், சினேகன், ஆரவ் ஆகியோர் தங்கியிருந்தனர். 100 நாள்கள் முடிந்து கிராண்ட் பினாலே கொண்டாட்டத்தின்போது மக்கள் ஓட்டுக்களை அள்ளி ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிலையில் இந்த நிகழ்ச்சியின் வெற்றிக் கொண்டாட்டம் நடைபெற்றது. இதில் ஸ்ரீ, நமீதா ஆகியோர் தவிர 16 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சி விஜய் டிவியில் வரும் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு ஒளிபரப்பாகிறது. இதில் ஆரவ்- ஓவியா இருவரும் ஒருவரை ஒருவர் பேட்டி எடுத்துக் கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்நிகழ்ச்சியில் ஓவியா கொக்கு நட்ட பாடலுக்கும், ஜிமிக்கி கம்மல் பாடலுக்கும் நடனம் ஆடியுள்ளார்.
கலக்கப் போவது யார் என்ற நிகழ்ச்சியில் ஒரு ரசிகர் ஒருவர் போன் போட்டு நடுவர்களான பிரியங்கா, மகேஷ்,பாலாஜி, ஆர்த்தி, சேது ஆகியோரை கலாய்ப்பார். அதுபோல் பிக்பாஸ் வெற்றி கொண்டாட்டத்திலும் அவர் போன் போட்டு கலாய்த்துள்ளார்.
அப்போது அந்த ரசிகர், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு ஆர்த்திதான் பொருத்தமானவர் என்றார். அதற்கு ஏன் என்று ஆர்த்தி கேட்டார். அப்போது அந்த ரசிகர், உங்களால்தானே ஓடவும் முடியாது, ஒளியவும் முடியாது என்றார். அதேபோல் எம்பிபிஎஸ் படித்தே டாக்டர் ஆகமுடியவில்லை. மெக்கானிக்கல் என்ஜினியரிங் படித்த நீங்கள் எப்படி டாக்டர் ஆனீங்க என்றார். இவை நிகழ்ச்சியின் ப்ரோமோவில் உள்ளது.