உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது, இந்தியாவில் மட்டும் உயர்வது ஏன்? ராகுல் காந்தி கேள்வி
குஜராத் சட்டப்பேரவைத் தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ், பாரதீய ஜனதா தீவிரமாக களமிறங்கி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி மத்திய அரசின் ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை மற்றும் ஜிஎஸ்டி வரிவிதிப்பு முறையை கடுமையாக விமர்சனம் செய்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரத்தை இருநடவடிக்கையும் அழித்துவிட்டது எனவும் பகிரங்கமாக குற்றம் சாட்டி உள்ளார் ராகுல் காந்தி. குஜராத் மாநிலம் தயாத்ராவில் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, உலகம் முழுவதும் பெட்ரோல் விலை குறைகிறது, இந்தியாவில் மட்டும் விலை உயர்வது ஏன்? இதனால் பயன் அடைவது யார்? என கேள்வி எழுப்பி உள்ளார்.
உலக வங்கி உலகில் எளிதாக தொழில்புரிவதற்கான நாடுகளின் பட்டியலை வெளியிட்டு உள்ளது. பட்டியலில் முதல் முறையாக இந்தியா 100-வது இடத்தை பிடித்திருக்கிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு 30 இடங்கள் இந்தியா முன்னேறி இருக்கிறது. சிறுமுதலீட்டாளர்கள் பாதுகாப்பு, மின்சாரம், கடன் கிடைப்பது உள்ளிட்ட 10 காரணிகளை அடிப்படையாக வைத்து பட்டியலை உலக வங்கி தயாரித்து வெளியிட்டு உள்ளது. இது குறித்து பேசிஉள்ள ராகுல் காந்தி, இந்தியாவில் தொழில்புரிவது என்பது எளிதானது கிடையாது, ரூபாய் நோட்டு ஒழிப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி இந்திய பொருளாதாரத்தை அழித்து உள்ளது உள்ளது என சாடிஉள்ளார்.