Breaking News
இந்து தீவிரவாதம் என்ற கமல் ஹாசன் கருத்துக்கு பா.ஜனதா எதிர்ப்பு; மனநிலை பாதிப்பு என விமர்சனம்
நடிகர் கமல்ஹாசன் தமிழ் வார இதழில் எழுதி வரும் தொடர் கட்டுரையில், இந்து தீவிரவாதம் இல்லை என கூறமுடியாது என்று தெரிவித்த கருத்தால் பெரும் சர்ச்சை ஏற்பட்டு உள்ளது. கட்டுரையில், முன்பெல்லாம் இந்து வலதுசாரியினர் மற்ற மதத்தைச் சார்ந்தவர்களுடன் வன்முறையில் ஈடுபடாமல், வாதப் பிரதிவாதங்கள் மூலமே எதிராளியை வன்முறையில் ஈடுபட வைத்தனர். ஆனால், இந்த பழைய சூழ்ச்சி தோற்க ஆரம்பித்ததும், யுக்தியால் முடியாததை சக்தியால் செய்யத் தொடங்கிவிட்டடனர் என்று கூறி உள்ளார். இந்து வலதுசாரியினரும் வன்முறையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டதாகவும், எங்கே ஓர் இந்துத் தீவிரவாதியைக் காட்டுங்கள் என்ற சவாலை இனி அவர்கள் விட முடியாது என்றும் கமல்ஹாசன் அந்தக் கட்டுரையில் கூறி உள்ளார்.
கமல் ஹாசன் கருத்துக்கு பா.ஜனதா மற்றும் சிவசேனா தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்து உள்ளது. கமல் ஹாசனுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு உள்ளது என பா.ஜனதா விமர்சனம் செய்து உள்ளது. பா.ஜனதா தலைவர் வினெய் காதியார் பேசுகையில், “கமல் ஹாசன் மனநிலை நிலையற்று உள்ளது. அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். இதுபோன்ற அவதூறான தன்மையில் அரசியல் சரியானது கிடையாது. அவரிடம் எந்தஒரு ஆதாரமும் கிடையாது. கமல் ஹாசனுக்கு எதிராக அவதூறு வழக்கை தொடர முடியுமா என்பது தொடர்பாக மாநில பா.ஜனதா ஆலோசிக்கும்,” என்றார்.
 பா.ஜனதா கட்சியின் செய்தி தொடர்பாளர் நரசிம்கா ராவ் பேசுகையில் நடிகர் கமல் ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்தார், மேலும் இஸ்லாமிய வாக்கு வங்கியின் மீது பார்வை கொண்டு உள்ளார் எனவும் விமர்சனம் செய்தார்.
“காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் ஆலோசனையின் கீழ் செயல்படும் ப சிதம்பரம் மற்றும் சுஷில் குமார் ஷிண்டே (முன்னாள் காங்கிரஸ் மந்திரிகள்) கருத்துக்களை போன்று கமல் ஹாசன் கருத்துக்களும் உள்ளது, இந்து மதத்திற்கு அவதூறு ஏற்படுத்தும் முயற்சி, இந்து தீவிரவாதம் என்பது அவருடைய கருத்து இஸ்லாமிய வாக்கு வங்கியின் மீதான அவருடைய பார்வையை தெளிவாக காட்டுகிறது,” என கூறிஉள்ளார் நரசிம்கா ராவ்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.