பெண்கள் பாதுகாப்பு: 10வது இடத்தில் தமிழகம்
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பாக உள்ள நகரங்கள் குறித்து எடுக்கப்படட ஆய்வில் கோவா முதலிடத்தில் உள்ளது. தமிழகம் 10 வது இடத்தில் உள்ளது.
பிளான் இந்தியா அமைப்பு, பெண்களுக்கான பாதுகாப்பு, உடல்நலம், கல்வியறிவு, வறுமை உள்ளிட்ட அம்சங்களை வைத்து இந்த ஆய்வை நடத்தியது. இந்த ஆய்வு முடிவை மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் வெளியிட்டுள்ளது.
அதில், கோவா முதலிடத்தில் உள்ளது. அதேநேரத்தில், கல்வியில் 5வது இடத்திலும், சுகாதாரத்தில் 6வது இடத்திலும், வறுமையில் 8 வது இடத்திலும் உள்ளது.
பெண்கள் பாதுகாப்பில் மற்ற மாநிலங்களின் நிலை:
2வது இடம்- கேரளா
3வது இடம்- மிசோரம்
4வது இடம்-சிக்கிம்
5வது இடம்- மணிப்பூர்
6வது இடம் -இமாச்சல பிரதேசம்
7வது இடம் -கர்நாடகா
8வது இடம் – பஞ்சாப்
9வது இடம்-மகாராஷ்டிரா
10வது இடம்- தமிழகம்
11வது இடம்-தெலுங்கானா
12வது இடம்-ஆந்திரா
13வது இடம்- உத்தர்கண்ட்
14வது இடம்-நாகாலாந்து
15வது இடம்-சத்தீஸ்கர்
16வது இடம்-குஜராத்
17வது இடம்-திரிபுரா
18வது இடம்-மேற்கு வங்கம்
19வது இடம்-அரியானா
20வது இடம்-ஜம்மு காஷ்மீர்
21வது இடம்- மேகாலயா
22வது இடம்-ராஜஸ்தான்
23வது இடம்-ஒடிசா
24வது இடம்-அசாம்
25வது இடம்-மத்திய பிரதேசம்
26வது இடம்- அருணாச்சல பிரதேசம்
27வது இடம்-ஜார்க்கண்ட்
28வது இடம்-டில்லி
29வது இடம்-உத்தர பிரதேசம்
30வது இடம்- பீஹார்
கல்வியில்
சிறந்த மாநிலங்கள்: இமாச்சல பிரதேசம், சிக்கிம், பஞ்சாப், மகாராஷ்டிரா, கோவா
மோசமானவை: டில்லி, அருணாச்சல பிரதேசம், ஜார்க்கண்ட், மேகாலயா, மத்திய பிரதேசம்
சுகாதாரத்தில்
சிறந்தவை: கேரளா, தமிழகம், சிக்கிம், கர்நாடகா, ஆந்திரா
மோசம்: பீஹார், அரியானா, ஜார்க்கண்ட், மேகாலயா, உ.பி.,
வறுமை:
சிறந்தவை: மணிப்பூர், மிசோரம், தமிழகம், தெலுங்கானா, ஆந்திரா
மோசம்: பீஹார், உ.பி., ஜார்க்கண்ட், காஷ்மீர், அசாம்.