கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களில் மழை பெய்யும் -சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை மைய இயக்குனர் பால்சந்திரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை மற்றும் தமிழக கடற்கரையையொட்டி நிலவுகிறது. கடலோர மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் அனேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிக கனமழை பெய்யும் . மீனவர்கள் எச்சரிக்கையுடன் மீன் பிடிக்க செல்ல வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது. குறைந்த தாழ்வழுத்த பகுதி வங்க கடலில் அங்கும் இங்குமாக மாறிக்கொண்டு இருக்கிறது.
குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை மற்றும் தமிழக கடற்கரையையொட்டி நிலவுகிறது. அடுத்த 2 நாட்களுக்கு அநேக இடங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது.
நேற்று அதிகபட்சமாக மயிலாப்பூர் – 30 செ.மீ, சத்யபாமா – 20 செ.மீ, தரமணி – 19 செ.மீ மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்