Breaking News
ரிசர்வ் வங்கியில் உதவியாளர் பணி! 623 பேருக்கு வாய்ப்பு!

இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935-ல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949-ல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. இதுவே அரசின் கருவூலம் ஆகும். நாட்டின் செலாவணிக்குரிய நாணயத்தை வெளியிடுவதோடு, இவ்வங்கி நாட்டின் பல பொருளாதார
நடவடிக்கைகளை இயக்கியும் வருகிறது.

இந்தியாவின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியின் கிளைகள் அனைத்து மாநிலங்களிலும் செயல்பட்டுவருகின்றன. தற்போது இந்தக் கிளைகளில் உதவியாளர் (அசிஸ்டன்ட்) பணிக்கு 623 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் அஹமதாபாத் 19, பெங்களூரு 25, போபால் 25, புவனேஸ்வர் 17, சண்டிகர் 13, சென்னை 15, கவுஹாத்தி 36, ஐதராபாத் 16, ஜெய்பூர் 13, ஜம்மு 23, கான்பூர்&லக்னோ 44, கொல்கத்தா 23, மும்பை 264, நாக்பூர் 15, புதுடெல்லி 47, பாட்னா 15, திருவனந்தபுரம் 13 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.

இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் பெற்றிருக்க வேண்டிய தகுதி விவரங்களை இனி பார்ப்போம்…

கல்வித்தகுதி:

அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் பட்டப்படிப்பு படித்து, 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினி இயக்கும் ஆற்றல் அவசியம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு:

விண்ணப்பதாரர்கள் 1.10.2017 தேதியில் 24 முதல் 28 வயது உடையவர்களாக இருக்க வேண்டும். ஓ.பி.சி. பிரிவினருக்கு 3 ஆண்டு களும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு அனுமதிக்கப்படுகிறது.

தேர்வு செய்யும் முறை:

முதல்நிலைத் தேர்வு மற்றும் முதன்மைத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இந்தப் பணிக்கு நேர்காணல் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

விண்ணப்பக் கட்டணம்:

பொது மற்றும் ஓ.பி.சி. பிரிவினர் ரூ.450, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் முன்னாள் படைவீரர்கள் ஆகியோர் ரூ.50 கட்டணமாக கிரெடிட்/டெபிட் கார்டு மூலம் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.rbi.org.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம்.

10.11.2017-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். 

பின்னர் பூர்த்தியான விண்ணப்பத்தை நகல் எடுத்து குறிப்பிட்ட முகவரிக்கு 25.11.2017-ம் தேதிக்குள் கிடைக்கும்படி அனுப்பி வைக்க வேண்டும்.

மேலும் விரிவான விவரங்களைத் தெரிந்துகொள்ள www.rbi.org.in என்ற இணையதள முகவரியைப் பார்க்கவும்.

Leave comment

Your email address will not be published. Required fields are marked with *.