ரத்தப் பொரியல்
என்னென்ன தேவை?
ரத்தம் – 1,
வெங்காயம் – 3,
பச்சைமிளகாய் – 2,
இஞ்சி – 1 துண்டு,
பூண்டு – 5,
கொத்தமல்லித்தழை,
கறிவேப்பிலை – சிறிது, உப்பு,
எண்ணெய் – தேவைக்கு.
எப்படிச் செய்வது?
ரத்தத்தை வேகவைத்து துண்டுகள் போடவும். வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, பூண்டை பொடியாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி, கொத்தமல்லித்தழை, பூண்டு, கறிவேப்பிலை, மஞ்சள் தூள், உப்பு சேர்த்து வதக்கி துண்டுகள் செய்த ரத்தத்தை போட்டு கொத்தமல்லித்தழையை தூவி இறக்கவும்.