வாரணாசி கோர்ட்டில் கமல்ஹாசன் மீதான புகார் குறித்து 22–ந் தேதி விசாரணை
இந்து தீவிரவாதம் பற்றி நடிகர் கமல்ஹாசன் தெரிவித்த கருத்துக்கு எதிராக கமலேஷ் சந்திர திரிபாதி என்ற வக்கீல், உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் உள்ள கூடுதல் தலைமை ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் நேற்று முன்தினம் புகார் மனு கொடுத்தார். அதில், கமல்ஹாசன் தெரிவித்த கருத்துகள் இந்துக்களின் மத உணர்வை புண்படுத்தி இருப்பதாகவும், எனவே அவர் இதுபோன்ற கருத்துகளை இனிமேல் தெரிவிக்க தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
தனது மனு மீது வருகிற 22–ந் தேதி விசாரணை நடத்த கோர்ட்டு முடிவு செய்து இருப்பதாக கமலேஷ் சந்திர திரிபாதி நேற்று தெரிவித்தார்.