சீன எல்லையில் நிர்மலா சீதாராமன்
ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் 2 நாட்கள் பயணமாக நேற்றுமுன்தினம் அருணாசலபிரதேசத்துக்கு சென்றார். நேற்று அவர் இந்தியா–சீனா எல்லை கட்டுப்பாட்டு கோடு அருகே உள்ள இந்திய ராணுவ நிலைகளுக்கு சென்றார். அஞ்சா மாவட்டம் கபிது என்ற இடத்தில் இந்த நிலைகள் உள்ளன. அங்குள்ள வீரர்களுடன் உரையாடிய அவர், வீரர்களின் அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டினார்.
மேலும், அங்குள்ள நிலவரத்தையும், ராணுவத்தின் தயார்நிலையையும் கேட்டறிந்தார். அவருடன் கிழக்கு பிராந்திய ராணுவ தளபதி அபய் கிருஷ்ணாவும் சென்று இருந்தார்.
பின்னர், அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தில் உள்ள விமானப்படை தளத்துக்கும் நிர்மலா சீதாராமன் சென்றார்.