பணமதிப்பு நீக்கத்துக்கு பிறகு ரூ.17 ஆயிரம் கோடி டெபாசிட்
கருப்பு பணம் மற்றும் கள்ள நோட்டு புழக்கத்தை கட்டுப்படுத்தும் நோக்கில், புழக்கத்தில் இருந்த 1000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என மத்திய அரசு கடந்த நவம்பர் 8–ந்தேதி அறிவித்தது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் தங்களிடம் இருந்த மேற்படி நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்தனர்.
இந்த நாட்களில் பல்வேறு நிறுவனங்கள் தங்களிடம் இருந்த ஏராளமான மேற்படி நோட்டுகளை வங்கிகளில் டெபாசிட் செய்து பின்னர் திருப்பி எடுத்துக்கொண்டது தெரியவந்துள்ளது. அப்படி 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் ரூ.17 ஆயிரம் கோடிக்கு மேலான தொகையை வங்கிகளில் டெபாசிட் செய்து திருப்பி எடுத்துள்ளன.
எனவே இந்த 35 ஆயிரம் நிறுவனங்களின் பதிவையும் மத்திய அரசு ரத்து செய்துள்ளது. இந்த நிறுவனங்கள் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பதற்காக அவை குறித்த தகவல்களை அமலாக்கத்துறைக்கு தெரிவித்துள்ளதாக மத்திய கம்பெனிகள் விவகாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.