கிழடு என கூறி கிண்டல் செய்த கிம்: டுவிட்டரில் டிரம்ப் வருத்தம்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் வியட்நாமில் நடைபெறும் ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொண்டார்.
அதன்பின்னர் அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள தொடர் செய்தியில், அணு ஆயுதம் மற்றும் ராக்கெட் சோதனைகளை நடத்தி வரும் வடகொரியாவிற்கு எதிரான தடையை தொடர்ந்து சீன அதிபர் ஜின்பிங் அமல்படுத்தி வருகிறார்.
வடகொரியா அணு ஆயுத பயன்படுத்துதலை கைவிட வேண்டும் என ஜின்பிங் விரும்புகிறார் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர், கிம் என்னை கிழடு என கூறி கிண்டல் செய்துள்ளார். நான் அவரை குட்டையான மற்றும் குண்டான நபர் என ஒருபொழுதும் கூறாத நிலையில் அவர் இப்படி கூறி என்னை புண்படுத்தியுள்ளார்.
நான் அவருடைய நண்பராக கடும் முயற்சி செய்கிறேன். அது ஒருநாள் நடைபெற கூடும். நானும் கிம்மும் நண்பர்களானால் மிக மிக நன்றாக இருக்கும். இது நடப்பதற்கு வித்தியாசம் ஆக இருக்கலாம். ஆனால் இது சாத்தியப்படும் என்றும் அவர் டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.