பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அடுத்த ஆண்டு இந்தியா வருகிறார்
இந்தியாவிற்கான பிரெஞ்சு தூதர் அலெக்ஸாண்டர் ஜீக்லர் கூறியதாவது:
பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் அடுத்த ஆண்டு இந்தியா வர உள்ளார். வரும் 17-ம் தேதி பிரெஞ்ச் வெளியுறத்துறை மந்திரி இந்தியா வருகிறார். பிரான்ஸ் அதிபர் இந்தியா வரும் போது இந்தியாவின் பசிபிக் மற்றும் இந்திய கடல் தொடர்பான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையெழுத்தாக உள்ளது.
பாதுகாப்பினை வலுப்படுத்துதல் மற்றும் இந்தியாவுடன் தொடர்புடைய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் பற்றிய பணிகளில் ஈடுபட்டுள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.