தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இது குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது;- தேசிய பத்திரிகையாளர்கள் தினத்தை முன்னிட்டு பத்திரிகையாளர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். செய்தியாளர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் செய்திகளை சேகரிக்க கடுமையாக உழைக்கின்றனர்.
குரலற்றவர்களின் குரலாக இருக்கும் ஊடகத்தின் பணி பாராட்டத்தக்கது. கடந்த மூன்று ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்திற்கு பத்திரிகைகள் மூலம் பலம் அதிகரித்துள்ளது. தற்போது, சமூக ஊடகங்களின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. மொபைல் போன்கள் மூலம் செய்திகள் தெரிந்து கொள்கின்றனர். இந்த முன்னேற்றங்கள் ஊடகங்கள் சென்றடைதல் மற்றும் ஊடகத்திற்கான பங்களிப்பையும் ஜனநாயக பங்கெடுப்பையும் அதிகப்படுத்தும்.
துடிப்பான ஜனநாயகம் அமைய பத்திரிக்கை சுதந்திரம் அவசியம். நம் நாட்டு ஊடகங்கள் 125 கோடி மக்களின் திறமை, பலம், திறனை வெளிக்காட்டுவதாக அமைய வேண்டும். அனைத்து நிலைகளிலும் பத்திரிகை சுதந்திரத்தை நிலைநிறுத்துவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்” என்று தெரிவித்துளார்.