24 தமிழர்கள் மாயமான விவகாரம் இலங்கை ராணுவ தளபதிக்கு சம்மன்
இலங்கையில் ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையே 30 ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வந்த சண்டை 2009–ம் ஆண்டு மே மாதம் முடிவுக்கு வந்தது.
இந்தநிலையில் 1996–ம் ஆண்டு இலங்கை ராணுவத்தால் நாவல்குழி என்னும் இடத்தில் கைது செய்யப்பட்ட 24 தமிழ் இளைஞர்களின் கதி என்னவாயிற்று என்று தெரியவில்லை. இது குறித்து யாழ்ப்பாணம் ஐகோர்ட்டில் காணாமல் போன இளைஞர்களின் பெற்றோரும், அவர்களது உறவினர்களும் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு நீதிபதி இளஞ்செழியன் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது, நீதிபதி இளஞ்செழியன் இந்த விவகாரம் தொடர்பாக இலங்கை ராணுவ தளபதி மகேஷ் சேனநாயகே நவம்பர் 18–ந் தேதி (இன்று) காணாமல் போனவர்கள் குறித்து விளக்கம் அளிப்பதற்காக கோர்ட்டில் ஆஜராகும்படி சம்மன் அனுப்ப உத்தரவிட்டார்.