நவம்பர் மாத ஜி.எஸ்.டி., வருவாயில் சரிவு
நவம்பர் மாத ஜி.எஸ்.டி., வரி வருவாயில் சரிவு ஏற்பட்டுள்ளதாக மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் ஓரே வரி விதிப்பு முறையை கொண்டுவர ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி கடந்த ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. அது முதல் மாதந்தோறும் வரி வருவாய் கணக்கிடப்பட்டது.
சரிவு:
இது தொடர்பாக மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், கடந்த ஜூலை மாதம் ஜி.எஸ்.டி., வருவாய் ரூ. 95 ஆயிரம் கோடியாக இருந்தது. ஆகஸ்ட் மாதத்தி்ல் ரூ. 91 ஆயிரம் கோடியாகவும் ,செப்டம்பர் மாதம் ரூ. 92,150 கோடியாகவும் இருந்தது. இது கடந்த அக்டோபர் மாதம் ரூ.92 ஆயிரம் கோடியாகவும், நவம்பர் 27-ம் தேதி வரையிலான கணக்கின் படி ஜி.எஸ்.டி. வருவாய் ரூ. 83,346 கோடியாக சரிந்துள்ளது. இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.