இந்திய வரைபடத்தை சிதைத்து உலக வரைபடம்: இந்தியா கண்டனம்
கனடாவில் இந்தியாவில் காஷ்மீர், அருணாச்சல்பிரதேச மாநிலங்கள் இல்லாத உலக வரைபடம் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவியுள்ளது.
கனடாவில் முக்கிய நகரம் ஒன்றில் அமெரிக்காவின் கோஸ்ட்கோ என்ற பன்னாட்டு ஷாப்பிங் மாலில் பன்னாட்டு சில்லரை சங்கிலி தொடர் வர்த்தகம் நடத்தும் ஸ்டோரில் உலக வரைபடம் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தது. அதில் காஷ்மீர், அருணாசலம் ஆகிய மாநிலங்களின் வரைபடம் இல்லாமல் இருந்தது. இந்திய வரைபடத்தை சிதைக்கும் வகையில்இருந்த அதில் காஷ்மீர் தனி பிரதேசமாகவும், அருணாச்சல் பிரதேசம் சீனாவின் ஒரு பகுதியாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இது சமூக வலைதளங்களிலும் வைரலாக பரவிவருகிறது. டுவிட்டரில் கண்டன குரல்களும் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.