ஜீரோ நேரத்தில் விவாதம் : சாதனை படைத்த ராஜ்யசபா
பார்லி. ஒவ்வொரு கூட்டத்தொடரின் போதும் இரு அவைகளிலும் கேள்வி நேரத்தில் எம்.பி.க்கள் பல்வேறு பிரச்னைகள் குறித்து விவாதிக்க அனுமதி கேட்பர். அப்போது அவையில் கூச்சல், அமளி ஏற்படுவதும் கூட்டத்தொடர் ஒத்தி வைக்கப்படுவதும் பின்னர் கூடுவதும் தெரிந்ததே. அதே நேரம் ஜீரோ நேரத்தில் எந்த விவாதம் நடக்க வாய்ப்பில்லாமல் போகும்.
இந்நிலையில் நேற்று ராஜ்யசபாவில் ஜீரோ நேரத்தில் அனைத்து கேள்விகளும் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. மொத்தம் 19 எம்.பி.க்களில் 11 எம்.பி.க்கள் உரையாடல் மூலம் விவாதித்தனர். மீதமுள்ள 8 எம்.பி.க்கள் தாங்கள் பேசுவதை எழுதி வைத்து வாசித்தனர். இதன் மூலம் ஜீரோ நேரத்தினை வீணடிக்காமல் பொது முக்கியவத்துவம் வாய்ந்த பிரச்னைகள் தான் விவாதத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டன.
கடந்த 2002-ம் ஆண்டு நடந்த பார்லி. கூட்டத்தொடரின் போது ஜீரே நேரத்தில் இதே போவன்று விவாதம் நடந்தது. அதன் பின்னர் இப்போது தான் இது போன்ற நிகழ்வு நடந்துள்ளது. இது ஒரு சாதனை என கூறப்படுகிறது. ராஜ்யசபா தலைவர் வெங்கையா மகிழ்ச்சி தெரிவித்தார்.