காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதில் தாமதம்: நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மேலும் தாமதம் ஏற்படுத்தினால் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. பிரதமர் மோடி வெளிநாட்டு பயணத்தை முடித்து விட்டு இன்று வெளிநாடு திரும்புகிறார். இதனால் விரைவில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடப்படும் என்று மத்திய நீர்வளத்துறை செயலர் யுபி சிங் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு பருவ மழை காலத்துக்கு முன்னால் ஆணையம் அமைக்க மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மூன்று நாட்களுக்கு முன்பாகவே கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கிவிட்டது. இருப்பினும் இதுவரை மத்திய அரசு தரப்பில் எந்த ஒரு நடவடிக்கையும் இல்லை என்பதால் தமிழக அரசு மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.