பொது இடங்களில் இஸ்லாமியர்கள் முகத்திரை அணிய டென்மார்க் நாட்டில் தடை
பொது இடங்களில் இஸ்லாமியர்கள் முழு முகத்திரை அணியும் சட்டத்திற்கு தடை விதித்து டென்மார்க் அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
முகத்திரை விவகாரம் தொடர்பாக நடைபெற்ற வாக்கெடுப்பில் 75-ல் 30 வாக்குகள் எதிராக வந்துள்ளதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இத்தடையை மீறி பொது இடங்களில் முகத்திரை அணிபவர்களுக்கு அபராதத்துடன் கூடிய தண்டனை விதிக்கப்படும் என டென்மார்க் அரசாங்கம் எச்சரித்துள்ளது. இதனிடையே சமீபகாலமாக இஸ்லாமியர்களின் முகத்திரைக்கு ஐரோப்பிய நாடுகள் தடை விதித்து வரும் நிலையில் டென்மார்க்கும் இந்த பட்டியலில் சேர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.