இந்திய தடகள வீரர் புதிய சாதனை
இந்திய தடகள வீரர் முகமது அனாஸ் புதிய தேசிய சாதனையைப் படைத்துள்ளார்.
செக். குடியரசு நாட்டின் தலைநகர் பிராகிலுள்ள செனா நொவேஹோ மெஸ்டாவில் நடைபெற்று வரும் தடகளப் போட்டியின் ஆடவர் 400 மீட்டர் பிரிவில் இந்திய வீரர் அனாஸ் பங்கேற்றார்.
நேறறு முன்தினம் நடைபெற்ற இந்தப் போட்டியில் அனாஸ் பந்தய தூரத்தை 45.24 விநாடிகளில் கடந்து தனது முந்தைய சாதனையை (45.31 விநாடிகள்) முறியடித்தார். இந்திய அளவில் 400 மீட்டர் தடகளப் போட்டியில் வீரர் ஒருவரின் தேசிய சாதனையாகும் இது.
இதற்கு முன்பு முகமது அனாஸ், ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டியில் 45.31 விநாடிகளில் ஓடி சாதனையைப் படைத்திருந்தார்.
இந்த நிலையில் புதிய சாதனை படைத்த அனாஸுக்கு இந்திய தடகள சம்மேளனம் (ஏஎப்ஐ) உள்ளிட்ட விளையாட்டு அமைப்புகள் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளன.
இந்த சாதனையின் மூலம் ஒலிம்பிக் போட்டியின் ஆடவர் 400 மீட்டர் போட்டியில் பங்கேற்கும் தகுதியைப் பெற்ற 3-வது இந்தியர் என்ற பெருமையை அனாஸ் பெற்றுள்ளார். இதற்கு முன்பு இந்தியாவின் மில்கா சிங், கே.எம். பினு ஆகியோர் இந்த சாதனையைச் செய்துள் ளனர்.