வரும் 2019 மக்களவைத் தேர்தலில் மக்கள் ராகுல் காந்தியை அரவணைக்க மாட்டார்கள்: பாஜக கருத்து
பிரதமர் நரேந்திர மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆரத் தழுவலாம். ஆனால் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள மக்களவைத் தேர்தலில் ராகுலை மக்கள் அரவணைக்க மாட்டார்கள் என்று பாஜக தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அந்த கட்சி யின் ஊடகப் பிரிவு பொறுப்பாளர் அனில் பலுனி, ட்விட்டரில் கூறியிருப்பதாவது:
மக்களவைத் தேர்தலில் 150 தொகுதிகளில் போட்டியிட காங்கிரஸ் முடிவு செய்துள்ளது. அந்த கட்சியின் தலைவர் ராகுல் பிரதமர் கனவில் மிதக்கிறார்.
மக்களவையில் அரசுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம் பிக்கையில்லா தீர்மானம் மீதான விவாதத்தின்போது பிரதமர் மோடியை ராகுல் வலுக்கட்டாய மாக கட்டியணைத்தார். ஆனால் வரும் 2019 மக்களவைத் தேர்தலில் ராகுலை மக்கள் அரவணைக்க மாட்டார்கள்.
வரும் 2024-ம் ஆண்டிலும் மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர இப்போதே ராகுல் தயாராகி கொள்ளலாம்.
மன்மோகன் சிங் தலைமை யிலான ஆட்சி, ஊழலை அதிகரிப் பதை லட்சியமாக கொண்டு செயல்பட்டது. தற்போதைய பாஜக அரசு விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்குவதை லட்சியமாகக் கொண்டு செயல் படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.