சீனாவில் அலுவலகம்: ‘ஃபேஸ்புக்’ திட்டம் – சீன சந்தையை கைப்பற்ற முயற்சி?
ஃபேஸ்புக் நிறுவனம் சீனாவில் அலுவலகம் திறக்க திட்டமிட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனம் சீனாவில் தடை செய்யப்பட்டுள்ளது. சீனாதான் சமூக ஊடகத்திற்கான மிகப்பெரிய சந்தை. ஆனால், ட்வீட்டர், ஃபேஸ்புக், யு டியூப் ஆகிய சமூக ஊடகங்கள் அங்கு தடை செய்யப்பட்டுள்ளன.
சீனா சந்தையை எப்படியாவது கைப்பற்றிவிட வேண்டும் என இந்நிறுவனங்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றன. சீனாவில் உள்ள டெவலபர்களையும், ஸ்டார்ட் அப் நிறுவனங்களையும் ஊக்குவிக்கவே அங்கு அலுவலகம் திறக்க இருப்பதாக கூறுகிறது ஃபேஸ்புக் நிறுவனம்.