கோயம்பேடு சந்தைக்கு தாமதமாக வரும் காய்கறிகள்: நல்ல விலை கிடைக்காததால் விவசாயிகள் வேதனை
லாரிகள் வேலைநிறுத்தம் காரண மாக, கிடைக்கும் வாகனங்களில் ஏற்றிக்கொண்டு வரப்படும் காய்கறிகள், கோயம்பேடு சந் தைக்கு தாமதமாக வருவதால், அவற்றுக்கு நல்ல விலை கிடைக் காத நிலை உள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையில் உள்ள னர்.
சுங்கச்சாவடி கட்டணம் மற் றும் டீசல் விலை உயர்வு ஆகியவற்றை எதிர்த்து நாடு முழுவதும் லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களின் போராட்டம் ஒரு வாரத்தை எட்டியுள்ள நிலையில், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறி லாரிகள் கோயம்பேடு சந்தைக்கு வருவது குறைந்துள்ளது.
தமிழகத்தை விட பிற மாநிலங் களில் லாரி உரிமையாளர்கள் போராட்டம் தீவிரமடைந்துள்ளது. அதனால் தமிழகத்தின் பல்வேறு பகுதிகள், கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநில எல்லையில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு சென்ற காய்கறிகள் தற்போது கோயம்பேடு சந்தைக்கு கொண்டு வரப்படுகின்றன. போதிய லாரிகள் கிடைக்காததால், வாடகை அதிகம் கொடுத்து சிறு சரக்கு வாகனங்கள், அரசுப் பேருந்துகள் மூலம் கோயம்பேடு சந்தைக்கு விவசாயிகள் காய்கறிகளைக் கொண்டுவருகின்றனர். இந்த புதிய முறைகளால், காய்கறிகள் அதிகாலை நேரத்தில் கோயம் பேடு சந்தையை அடைய முடியவில்லை. அதனால் அந்த காய்கறிகளுக்கு நல்ல விலை கிடைக்கவில்லை. குறைந்த விலைக்கே வாங்கப்படுகின்றன.
இதுதொடர்பாக கோயம்பேடு மலர், காய், கனி வியாபாரிகள் நலச் சங்கத் தலைவர் எம்.தியாகராஜன் கூறியதாவது:
காய்கறிகள் அதிகாலை நேரத்தில் சந்தைக்கு வந்தால்தான் நல்ல விலை கிடைக்கும். அதன்பிறகு வந்தால் குறைந்த விலைக்குத்தான் விற்க முடியும். இதனால் போதிய விலை கிடைக்காமல் விவசாயிகள் அவதிக்குள் ளாகியுள்ளனர். சில தினங்களுக்கு முன்பு ரூ.30 வரை உயர்ந்திருந்த தக்காளியின் விலை நேற்று ரூ.18 முதல் ரூ.22 வரையும், ரூ.60-க்கு விற்கப்பட்ட பீன்ஸ் ரூ.50 எனவும் விலை குறைந்து விற்கப்படுகிறது. அதே போன்று பீன்ஸ் கிலோ ரூ.50, கேரட் ரூ.40, அவரைக்காய் ரூ.30, முருங்கைக்காய் ரூ.18, பீட்ரூட் ரூ.35 என விலை குறைந்துள்ளது.
விவசாயிகள் பல மாதங்கள் கஷ்டப்பட்டு பயிர் செய்த காய்கறிகள், சில தினங்களில் அழுகக் கூடியவை. அதனால் லாரி உரிமையாளர்களின் வேலை நிறுத்தத்தால் அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இந்த விவகாரத் தில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு, லாரி உரிமை யாளர்களின் போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.