சாதனை படைத்த திருப்பதி உண்டியல் காணிக்கை- ஒரே நாளில் ரூ. 6.28 கோடி
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று ஒரே நாளில் ரூ.6.28 கோடி உண்டி யல் காணிக்கை செலுத்தப் பட்டுள்ளது.
உலகின் பணக்கார கடவுளாக கருதப்படும் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த ஆண்டு உண்டியல் மூலம் மட்டும் ரூ.1,100 கோடி வருவாய் கிடைத்துள்ளது.
பக்தர்கள் நேர்த்திக் கடனான உண்டியலில் செலுத்தும் காணிக்கை தினமும் ஸ்ரீவாரி பக்தர்கள் மற்றும் தேவஸ்தான, வங்கி ஊழியர்கள் மூலம் எண்ணப்பட்டு, உடனுக்குடன் அரசு வங்கிகளில் டெபாசிட் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 12 முறை உண்டியல் நிரம்பி, மாற்று உண்டியல் வைக்கப்படுகிறது. இந்த உண்டியலில் பக்தர்கள் பணம் மட்டுமின்றி நகை, விலையுயர்ந்த கற்கள், வீட்டு, நிலப்பட்டா பத்திரங் கள் போன்றவையும் காணிக் கையாக செலுத்தி வருகின்ற னர். மேலும், பெண்கள் தங்கள் தாலிகளையும் உண்டியலில் செலுத்துகின்றனர். உண்டியல் மூலம் வரும் காணிக்கையை அரசு வங்கிகளில் அதிகாரிகள் டெபாசிட் செய்து, அதில் வரும் வட்டி மூலம் பக்தர்களுக்கு அன்னதானம் செய்து வருகின்றனர்.
தற்போது ஏழுமலையான் கோயில் தினசரி உண்டியல் வருமானம் சுமார் ரூ.3 கோடியாக உள்ளது. 2012-ம் ஆண்டு, ஜனவரி 1-ம் தேதி ரூ.4.23 கோடி உண்டியல் மூலம் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தினர்.
இதையடுத்து அதே ஆண்டில், ஏப்ரல் 2-ம் தேதி, ஸ்ரீராம நவமியன்று, உண்டியலில் பக்தர்கள் ரூ.5.73 கோடி காணிக்கை செலுத்தினர். இதுவே அதிக பட்ச காணிக்கையாக நேற்று வரை நீடித்தது. ஆனால் நேற்று இதுவரை எப்போதும் இல்லாத வகையில் ரூ. 6.28 கோடி உண்டியல் காணிக்கை செலுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.