வடக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு
சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
வடக்கு வங்கக் கடலில் அடுத்த இரு நாட்களில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப் புள்ளது. அதன் மூலம் தமிழகத் துக்கு மழை கிடைக்க வாய்ப் பில்லை. அது ஒடிசா அல்லது மேற்கு வங்கம் நோக்கி செல்ல வாய்ப்புள்ளது. வெப்பச் சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி யில் ஓரிரு இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
தமிழகம், புதுச்சேரி கடலோரப் பகுதியில் மணிக்கு 45 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீச வாய்ப்புள்ளது. அதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப் படும். வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் 6 செமீ, கடலூர் மாவட்டம் நெய்வேலி, பரங்கிப்பேட்டை ஆகிய இடங்களில் தலா 5 செமீ, விழுப்புரம் மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் 4 செமீ மழை பதிவாகியுள்ளது.